ஆண் பெண்ணுக்கு நிகரோ

எம்முடன் நீரும் நேரோ?
எம் செயல்யாவும் செய்வீரே!
உம்செயலறியா செருக்கன் செய்யும் பிழையும் புரிதலின்றி புரிவீரே!

உயிர்த்தலும் உந்துதலும் உமையின்றி
உலகிற்கு உயர்த்தும் உள்ளமுண்டோ..?
மேன்மை கொண்ட கொற்றவையே!

நாரன் நல்கும் நரகு
நல்காது நடவும் நன்மாதரே..,

நேர் கொண்டு பாரீர்!
நிமிர்ந்து நன் நடைசெய்வீர்!

-தமிழன் மணிகண்டன்

எழுதியவர் : தமிழன் மணிகண்டன் (20-Nov-17, 11:33 am)
சேர்த்தது : Thamizhan Mani
பார்வை : 898

மேலே