Umamsmv - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Umamsmv
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Apr-2017
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  1

என் படைப்புகள்
Umamsmv செய்திகள்
Umamsmv - எண்ணம் (public)
01-Nov-2017 1:43 am

முத்தம் தாராயோ ...!!
மாயக் கவிக்கு முத்தமொன்று தாராயோ ...
என் மனதினுள் நுழைந்து
என்னைக் கலைந்தவளே !
 என் பொன் மானே !

மாயச் சாவிக் கொண்டு
என் மனதினைக் கொள்ளை கொண்டவளே
வண்ண மலர்களால் எனைக் கொய்தவளே ...!
என் பெண் மானே ..!

இலையுதிர் காலத்தின் சுகத்தை
 தன் இதழால் வருடிக் கொடுத்தவளே
காந்தப் பார்வையால் எனை நெய்தவளே ...!
என் பெண்ணழகே ...!

பனிக்காலக் குளிரின் இதத்தை
தன் அழகின் அணைப்பால் அணைத்தவளே
கள்ளப் பார்வையால் எனைக் கட்டி இழுத்தவளே ...!
என் அழகே !! அழகின் அழகே !!
சற்றே இளைப்பாற முத்தம் ஒன்று தாராயோ ...!!?

மேலும்

Umamsmv - எண்ணம் (public)
01-Nov-2017 1:40 am

ஹாலோவீன் ...!!

ஆதவன் சற்றே இளைப்பாற
அந்திமம் சற்றே பவனி வர
விருந்தா வித்தையா என அறிந்தும் அறியாமலே
விந்தையாய் கேள்விதனைக் கேட்டபடிஉலாவரும்
குழந்தைகளை மகிழ்விக்க அக்டோபரில் வந்த ஹாலோவீனே ...!!

இன்முகத்தை முகமுடிக்குள் மறைத்தே
இடையினில் மந்திரக்கோலைக் கொண்டே
விந்தைபலக் காட்டி வியக்கச் செய்தே
இனிப்புகளை அள்ளிச் சென்ற
ஹாரிபார்டரையும் அறிந்தும் அறியாமலே 
சாகசமாய் எண்ணி மகிழ்வித்த  ஹாலோவீனே..!!

இல்லாத ஆவியையும் பிசாசையும்
இன்பமாய் கொண்டாடி மகிழவே
காண்பவருக்கு பயத்தினையும்
அணிபவருக்கு இன்பத்தையும்
ழந்தைகளுக்கோ குதூகலத்தையும்
அன்பளிப்பாய்  அள்ளித் தந்த ஹாலோவீனே....!!

மேலும்

Umamsmv - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2017 10:34 pm

நிலவும் வசப்படும்


ஆனந்த யாளை மீட்டுகிறாள் ….
அடிநெஞ்சில் ஆயிரம் வண்ணம்
கூட்டுகிறாள் ….!!
கோயில் எதற்கு ..? தெய்வங்கள் எதற்கு…?
உன் புன்னகை ஒன்றே போதுமே…!!

ரகு என்கிற ரகுவரன் சாதாரண மிடில்கிளாஸ் குடும்பத்தைச் சேரந்தவன் . இவனது மனைவி அகிலா . இவர்களுக்கு அனன்யா என்ற ஒரு தேவதை உண்டு . இவன் உயர்ரக கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் உயர்பதவியில் வேலை பார்க்கிறான் . நாள்தோறும் அவனுக்கு வேலை பளு அதிகரித்துக் கொண்டே இருந்தது , அவனும் எவ்வளவோ முயற்சி செய்து வெளியில் வர முயல்கிறான் , ஆனால் இவன் திறமைக்கு ஏற்ற வேலை கிடைத்தப்பாடில்லை .

ந “ மக்கு இருக்கிற ஒரே சொத்து நம்மிடம் உள்ள திறமை “ தா

மேலும்

கருத்துகள்

மேலே