எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஹாலோவீன் ...!! ஆதவன் சற்றே இளைப்பாற அந்திமம் சற்றே...

ஹாலோவீன் ...!!

ஆதவன் சற்றே இளைப்பாற
அந்திமம் சற்றே பவனி வர
விருந்தா வித்தையா என அறிந்தும் அறியாமலே
விந்தையாய் கேள்விதனைக் கேட்டபடிஉலாவரும்
குழந்தைகளை மகிழ்விக்க அக்டோபரில் வந்த ஹாலோவீனே ...!!

இன்முகத்தை முகமுடிக்குள் மறைத்தே
இடையினில் மந்திரக்கோலைக் கொண்டே
விந்தைபலக் காட்டி வியக்கச் செய்தே
இனிப்புகளை அள்ளிச் சென்ற
ஹாரிபார்டரையும் அறிந்தும் அறியாமலே 
சாகசமாய் எண்ணி மகிழ்வித்த  ஹாலோவீனே..!!

இல்லாத ஆவியையும் பிசாசையும்
இன்பமாய் கொண்டாடி மகிழவே
காண்பவருக்கு பயத்தினையும்
அணிபவருக்கு இன்பத்தையும்
ழந்தைகளுக்கோ குதூகலத்தையும்
அன்பளிப்பாய்  அள்ளித் தந்த ஹாலோவீனே....!!

பதிவு : Umamsmv
நாள் : 1-Nov-17, 1:40 am

மேலே