kaarthik19 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kaarthik19
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Mar-2016
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  5

என் படைப்புகள்
kaarthik19 செய்திகள்
kaarthik19 - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2023 7:13 am

நிச்சயம் இது அதி சுகாதார பூங்காதான்...
நடைபயணம் நடைப்பயிற்சியாக மாறும் வயதோரை
இந்தப்பூங்கா வா வா என அணைக்கிறது!

சிறுவர்கள் யுவதிகள் பறவைகள்
என கண்களும் பயிற்சி செய்தன!

வசந்த கால சுகத்தை உடல் முழுக்க
பூசிச் செல்கிறது தென்றல்!

Hello... How are you... Good morning... Take care..
வாழ்த்துகளுக்கும் குறைச்சல் இல்லை தான்!

Iphone airpod mac என தொழில்நுடபத்திலும் கூட
உச்சம் தொட்டவன் தான்!

ஆனாலும் என்ன, எப்போது கேட்டாலும்..
"தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?" என்ற வரிகளை
கண்ணீரில்லாமல் கடக்க முடிவதில்லை....

மேலும்

kaarthik19 - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2018 5:43 am

ஒரு சிவன் சக்தியாகும் நேரமானது,
அவ்வளவு ரம்மியமானது...
அவசரமாக பள்ளிக்குக் கிளம்பும் மகளுக்கு
அமுதூட்டும் போதும்,
கூந்தலுக்கு ரிப்பன் கட்டும்போதும்,
மகள் கைகளை கன்னங்களில் வைத்து
"அழகா இருக்கனா அப்பா?" என கேட்கும்போதும்,
உனக்கென்னடி ராஜாத்தி எனக் கன்னத்தில் மையிடும் போதும்,
மார்பினில் மகளைத் தாங்கி உறங்க வைக்கும்போதும்,
சஞ்சலத் துளியின்றி அவள் கன்னங்களில் முத்தமிடும் போதும்,
மகள் அவள் கணவனிடம் தன்னைப்பற்றிப் பெருமை பீற்றும் போதும்,
தன் மூப்பில் கூட மகளின் காய்ச்சலுக்கு
கசாயம் வைத்துக் கொடுக்கும் போதும்,
என எல்லா நேரங்களிலும் வானவில் தன் வண்ணத்தை
இவனுக்கு அளித்துவிட்டு அது நிர்வ

மேலும்

kaarthik19 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2017 5:12 am

நெட்டெழுத்துக்கள்
இல்லா வாரத்தை
"நெடில்"
------------------------------------------
இதழோடு
இதழ் சேர்ந்தது?
"மலர்"
------------------------------------------
வில் கொண்டு
அம்பு எய்தன
"விழிகள்"
-----------------------------------------
புகை கொட்டிச் செல்கிறது
குப்பையில்லாக்
"குப்பை" வண்டி
-----------------------------------------
அரசியல் செய்யாதே
என்றான்
"அரசியல்வாதி"

மேலும்

kaarthik19 - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2016 5:26 pm

அளவில்லாத அணுகுண்டுகளை வாங்கி
கிடங்கில் போட்டாகி விட்டதல்லவா?

அடுத்த பால்வெளியின் புள்ளியைத் துல்லியமாகத்
தாக்கும் ஏவுகணைகளை சேர்த்தாகி விட்டதல்லவா?

ஆயுத பேரம் கொழிக்க, பிற இடங்களில் புரட்சி கடவுள் என
ஏதொரு பெயரில் யுத்தம் முடுக்கப்பட்டு விட்டதல்லவா?

பல்வேறு மாதர்தம் புனிதங்கள் இழந்திட கோடிகளில்
ஆண்கொணர்வு முடிந்தாகி விட்டதல்லவா?

அவ்வளவுதான்...
இதோ நாம் உலக அமைதியை நடத்தத் தயாராகி விட்டோம்...
நம் அன்பானது ஸ்பரிசிக்க தயாராகி விட்டது..
இனி நம்மை எதிர்த்து யாரும் பேசட்டும்... பேசிப் பார்க்கட்டும்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே