நியூ ஜெர்சியில் ஒரு நாள்
நிச்சயம் இது அதி சுகாதார பூங்காதான்...
நடைபயணம் நடைப்பயிற்சியாக மாறும் வயதோரை
இந்தப்பூங்கா வா வா என அணைக்கிறது!
சிறுவர்கள் யுவதிகள் பறவைகள்
என கண்களும் பயிற்சி செய்தன!
வசந்த கால சுகத்தை உடல் முழுக்க
பூசிச் செல்கிறது தென்றல்!
Hello... How are you... Good morning... Take care..
வாழ்த்துகளுக்கும் குறைச்சல் இல்லை தான்!
Iphone airpod mac என தொழில்நுடபத்திலும் கூட
உச்சம் தொட்டவன் தான்!
ஆனாலும் என்ன, எப்போது கேட்டாலும்..
"தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?" என்ற வரிகளை
கண்ணீரில்லாமல் கடக்க முடிவதில்லை....