வெண்புறா

அளவில்லாத அணுகுண்டுகளை வாங்கி
கிடங்கில் போட்டாகி விட்டதல்லவா?

அடுத்த பால்வெளியின் புள்ளியைத் துல்லியமாகத்
தாக்கும் ஏவுகணைகளை சேர்த்தாகி விட்டதல்லவா?

ஆயுத பேரம் கொழிக்க, பிற இடங்களில் புரட்சி கடவுள் என
ஏதொரு பெயரில் யுத்தம் முடுக்கப்பட்டு விட்டதல்லவா?

பல்வேறு மாதர்தம் புனிதங்கள் இழந்திட கோடிகளில்
ஆண்கொணர்வு முடிந்தாகி விட்டதல்லவா?

அவ்வளவுதான்...
இதோ நாம் உலக அமைதியை நடத்தத் தயாராகி விட்டோம்...
நம் அன்பானது ஸ்பரிசிக்க தயாராகி விட்டது..
இனி நம்மை எதிர்த்து யாரும் பேசட்டும்... பேசிப் பார்க்கட்டும்...

எழுதியவர் : கார்த்திக் (29-Dec-16, 5:26 pm)
சேர்த்தது : kaarthik19
Tanglish : venpuraa
பார்வை : 77

மேலே