சக்தி

ஒரு சிவன் சக்தியாகும் நேரமானது,
அவ்வளவு ரம்மியமானது...
அவசரமாக பள்ளிக்குக் கிளம்பும் மகளுக்கு
அமுதூட்டும் போதும்,
கூந்தலுக்கு ரிப்பன் கட்டும்போதும்,
மகள் கைகளை கன்னங்களில் வைத்து
"அழகா இருக்கனா அப்பா?" என கேட்கும்போதும்,
உனக்கென்னடி ராஜாத்தி எனக் கன்னத்தில் மையிடும் போதும்,
மார்பினில் மகளைத் தாங்கி உறங்க வைக்கும்போதும்,
சஞ்சலத் துளியின்றி அவள் கன்னங்களில் முத்தமிடும் போதும்,
மகள் அவள் கணவனிடம் தன்னைப்பற்றிப் பெருமை பீற்றும் போதும்,
தன் மூப்பில் கூட மகளின் காய்ச்சலுக்கு
கசாயம் வைத்துக் கொடுக்கும் போதும்,
என எல்லா நேரங்களிலும் வானவில் தன் வண்ணத்தை
இவனுக்கு அளித்துவிட்டு அது நிர்வாணமாகக் கூடும்...
அந்நேரங்களில் இயற்கை கூடத் தன் அழகில்
இவனிடம் தோற்பதுண்டு...

எழுதியவர் : கார்த்திக் (1-Mar-18, 5:43 am)
சேர்த்தது : kaarthik19
Tanglish : sakthi
பார்வை : 78

மேலே