மித்ரா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மித்ரா
இடம்
பிறந்த தேதி :  26-Jun-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Mar-2019
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  1

என் படைப்புகள்
மித்ரா செய்திகள்
மித்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2019 2:22 pm

கார்முகிலா...! கண்ணா...!

கண்கொண்டு பராயோ?

துகில்கொண்டு காப்பாயோ?

பாவியர் சபைதனிலே பாவிகள் நடுவிலே

பாஞ்சாலியல்ல நான்,

படும் பாடு தான் கேளாயோ!

கயவனின் கைகளால் கசையடி,

கள்ளிப்பால் மிடுறு கொடுத்திருக்கலாமே?

கள்வன் கசக்கிய மென்மலர்,

கல்லாய் சமைந்திருக்கலாமே?

கல்லாய் படைத்திட்டால் தான்,

காமுகனுக்குச் சுகமெது? கன்னியருக்கு வலியேது?

ஓயாத கண்ணீர் ஒருநாளா?

நாகப்படமாய் மிரட்டும் ஒளிப்படம்,

ஒருமுறை கொத்திட்டாலோ உயிர் வலி!

இனி நானென்ன செய்வேன்? காப்பாயோ க(அ)ண்ணா.....?!


கண்ணன் :

நீலக் கடலில் நித்திரையில் கிடைக்கும்,

நானோ வெண்ணைத்திருடன்!

என்னையேன் சகி அழைக்கிறாய்?

என்னைப் பெற்றவளே நீ!

மேலும்

கருத்துகள்

மேலே