vivek.mac - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : vivek.mac |
இடம் | : Erode |
பிறந்த தேதி | : 20-Jul-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 300 |
புள்ளி | : 41 |
ஒரு வரியில் சொல்லப் போனால் நல்லவன் கிடையாது !!!
சோகம் மறக்க பழகிக்கொண்டேன் பின்
மறக்க முடியாமல் சோகம் கொண்டேன்
குடித்தபின் எடுக்கும் சபதமெல்லாம்
மீண்டும் குடிக்க தூண்டியது
விட்டு விடத்தான் மனம் நினைக்கும்
விருப்பமில்லாமல் அதைக் குடிக்கும்
விருப்பம் கொண்ட நண்பர் பலர்
அவர்கள் விருப்பம் மறுக்க இயலவில்லை
இன்றே கடைசி என்றேதான்
எடுத்த சபதங்கள் எத்தனையோ
சுவற்றில் எறிந்த பந்துபோல்
மீண்டும் மீண்டும் தொடர்கிறதே
தவறென்று தெரிந்தும் அதற்காக(மதுவுக்காக)
தவமிருக்கிறது என் மனது
எப்போது விடுதலை
மதுவென்னும் மாயையிலிருந்து !!!
இருந்தால் துன்பமில்லை
இல்லையென்றால் இன்பமில்லை !
காடுகளை அழித்தே
வீடுகள் பல அமைத்தோம்
மரங்களை அழித்தோம்
மழை வருவதை தடுத்தோம்
காற்றையும் அசுத்தம் செய்தோம்
நம்மால் இயன்றவரை எல்லாம் செய்தோம்
ஆனால் மழை இல்லையென்று மட்டும்
இயற்கை மேல் பழி
அன்றோ, கரிகாலன்
கல்லணை அமைத்தான் நீரினை சேமித்தான்
இன்றோ, அந்த நீரினை விற்றே
பணத்தை சம்பாதிக்கிறோம்
காற்றையும் நீரையும்
காசு குடுத்து வாங்கும் அவலநிலை.
நண்பனும் பகைவன் ஆனான்
பகைவனும் நண்பனானான்
எல்லாம் பணம் செய்த வேலை.
பணம் இருப்பவனோ சேர்த்துவைத்தான்
இல்லாதவனோ இருப்பதை எல்லாம் செலவழித்தான்.
மானமும் இல்லை
மதிப்பும் இல்லா
மதிகெட்டவனிடம் பணமிருந்தால்
மரியாதை செய்யும் இவ்வுலகமே.
பணம் என்ற ஒன்றால் மனிதன்
வாழும் நாட்களை தொலைத்தான்