பணம்

நண்பனும் பகைவன் ஆனான்
பகைவனும் நண்பனானான்
எல்லாம் பணம் செய்த வேலை.

பணம் இருப்பவனோ சேர்த்துவைத்தான்
இல்லாதவனோ இருப்பதை எல்லாம் செலவழித்தான்.

மானமும் இல்லை
மதிப்பும் இல்லா
மதிகெட்டவனிடம் பணமிருந்தால்
மரியாதை செய்யும் இவ்வுலகமே.

பணம் என்ற ஒன்றால் மனிதன்
வாழும் நாட்களை தொலைத்தான்

எழுதியவர் : விவேகானந்தன் (19-Mar-14, 11:24 am)
சேர்த்தது : vivek.mac
Tanglish : panam
பார்வை : 406

மேலே