மது
சோகம் மறக்க பழகிக்கொண்டேன் பின்
மறக்க முடியாமல் சோகம் கொண்டேன்
குடித்தபின் எடுக்கும் சபதமெல்லாம்
மீண்டும் குடிக்க தூண்டியது
விட்டு விடத்தான் மனம் நினைக்கும்
விருப்பமில்லாமல் அதைக் குடிக்கும்
விருப்பம் கொண்ட நண்பர் பலர்
அவர்கள் விருப்பம் மறுக்க இயலவில்லை
இன்றே கடைசி என்றேதான்
எடுத்த சபதங்கள் எத்தனையோ
சுவற்றில் எறிந்த பந்துபோல்
மீண்டும் மீண்டும் தொடர்கிறதே
தவறென்று தெரிந்தும் அதற்காக(மதுவுக்காக)
தவமிருக்கிறது என் மனது
எப்போது விடுதலை
மதுவென்னும் மாயையிலிருந்து !!!