சன்னதிக்குப் போகாதே....! சங்கடத்தை விதைப்பவனை சாமியருள் சேர்வதில்லை.....!! தண்ணியடிக்கப்...
சன்னதிக்குப் போகாதே....!
சங்கடத்தை விதைப்பவனை
சாமியருள் சேர்வதில்லை.....!!
தண்ணியடிக்கப் போகாதே....!
தன்மானம் இழந்தவன்
தன் நிலைமறக்கத் தேவையில்லை....!!
நண்பனென்று சொல்லாதே....!
நம்பிக்கை ஏற்படுத்தாத
நட்புக்கு மதிப்பில்லை.....!!
உறவென்று கூறாதே...!
உள்ளத்தை மதிக்காத
உறவுக்கு அர்த்தமில்லை....!!
பந்தமென்று பிதற்றாதே.....!
பணம் பார்க்கும் உள்ளங்கள்
பந்த பாசம் பார்ப்பதில்லை.....!!
வினையென்றும், விதியென்றும்
வீண்பேச்சு பேசாதே......!
மனமொன்று இலாதவனை
மற்றெதுவும் பாதிப்பதில்லை.....!!
ரகசியங்கள் பேணாத ராத்திரிக்கு அர்த்தமில்லை.......!!!
அவசியத்திற்குதவாத ஆட்களுக்குச் சொர்க்கமில்லை.....!!!