தனக்கு தான் அடிக்கத் தெரியும்னு சகட்டுமேனிக்கு குத்துறாய்ங்க சில...
தனக்கு தான்
அடிக்கத் தெரியும்னு சகட்டுமேனிக்கு
குத்துறாய்ங்க சில பேரு..
எப்படி பாத்தாலும்
நம்ம பயன்னு
கொஞ்சுறாய்ங்க
சில பேரு..
ஒருத்தர காட்டி
இவன ஏன்யா
இன்னும் அடிக்கவுமில்ல
கொஞ்சவுமில்லய்ங்குறாங்க
சில பேரு..
புள்ளைக்கு வலிக்க கூடாதேனு
ஒரு ஆஃப ஊத்தி கொடுத்து
அடிக்குறாய்ங்க
சில பேரு.
ஊத்துனத மட்டும் பாத்து
அதுக்குள்ள அடிச்சத பாக்காம
குமுறிகிட்டு சுத்துராய்ங்க
சில பேரு..
அதிகமா அடிவாங்குனது நானு
எனக்கு தான் இந்த வெங்கலக் கிண்ணம்
அப்டினிட்டு சுத்துறாய்ங்க
சில பேரு.
அதிகமா அடிவாங்குனதுல
சண்ட போட தெரிஞ்சவங்க
சில பேரு
சண்டையே போட
தெரியாதவங்க
சில பேரு.
பொறுமையா
பாத்துகிட்டு இருந்தவக
ஆஃப ஊத்திக் கொடுத்துட்டு
அடிக்குறவங்க பேச்சயும்
கேட்க தயாராயிட்டாங்களாம்..
உண்மையாவே
ஆஃப ஊத்திக் கொடுத்து
அடிக்குறது யாருனு
குழப்பத்துல சில பேரு..
யாருய்யா இந்த கோமாளி
அடிக்குறத பத்தி பேசுதான்
இவன் எத்தன அடி வாங்கிருக்கான்
எத்தன அடி கொடுத்துருக்கான்னு
எண்ண ஆரம்பிச்சுர்வாய்ங்க
சில பேரு..
"என்ன மாப்ளேய்... " நண்பன் கூப்டுறாரு.. அப்புறம் வாறேன்...