எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இளைஞனே..!! இளைஞனே..!! அங்கே உன்னை எண்ணி பல கனவுக்...

இளைஞனே..!! இளைஞனே..!!
அங்கே உன்னை எண்ணி
பல கனவுக் கோட்டைகளை
எழுப்பிக் கொண்டிருக்கிறார்
அந்த ராமநாதபுரத்து விஞ்ஞானி..

ஆனால் இங்கு நீயோ
சின்னஞ்சிறு அற்ப விடயங்களுக்கு எல்லாம்
இப்படி துவண்டு போய் நிற்கிறாயே
இது நியாயமா..??

நீ நினைத்தால்
இந்த அற்பங்களைஎல்லாம்
உதறிவிட்டு
அண்டத்தினரையே அசரவைக்கும்
அற்புதச் சாதனைகளை
நிகழ்த்த முடியுமே..!!

பிரச்சனைகளுக்குப் பின்னால்
முடங்கி நிற்காமல்
பிரபஞ்சத்தையே
உன் முன்னால்
வணங்கி நிற்கும்படி செய்ய
உனக்குத் தகுதி இல்லையா என்ன..??

ஒரு சிறு உளி தானே
அத்தனை பெரிய மலையையும்
தகர்க்கிறது..
உன் ஒரு துளி நம்பிக்கை போதுமே
இந்தப் பிறவிப் பெருங்கடலில்
நீந்துவதற்கு..

போனது போகட்டும்
இனி ஒருபோதும்
தயங்காதே.. தாமதிக்காதே..
எத்தனையோ மேதைகளால்
எழுதப்பட்ட நம் நாட்டின்
வரலாற்றில் உன்னுடைய
சாதனைகளும் புதுப்புது
புண்ணிய மாற்றங்களை
பறை சாற்றட்டுமே..
- மகாலட்சுமி தமிழ்

பதிவு : Mahalakshmi Tamil
நாள் : 14-Feb-14, 2:18 pm

மேலே