தூரங்கள் நம்மை பிரித்திருந்தாலும் நினைவுகளினால் என்றும் இணைந்திருப்போமென எண்ணியிருந்தேன்.....
தூரங்கள் நம்மை பிரித்திருந்தாலும்
நினைவுகளினால் என்றும்
இணைந்திருப்போமென
எண்ணியிருந்தேன்..
ஆனால் தோழனே,
"தனிமை" என்ற ஒரு வார்த்தையை
நீ உரைத்து நான் கேட்ட பிறகு
விடை தெரியாமல் விழிக்கின்றேன்..
குறைவு..
என் மீதான உன் நினைவுகளிலா??
அல்லது
உன் மீதான என் அன்பினிலா ?? என்று..