எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சேலம் யாருக்கு? தே.மு.தி.க., - பா.ம.க., சண்டை நீடிப்பு...

சேலம் யாருக்கு? தே.மு.தி.க., - பா.ம.க., சண்டை நீடிப்பு

பா.ஜ., கூட்டணியில், 99.5 சதவீத உடன்பாடு ஏற்பட்டு விட்டதாக, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர், முரளீதர் ராவ், சென்னையில் நேற்று தெரிவித்துள்ளார். 0.5 சதவீத உடன்பாடு முடியாமல் போனதற்கு, என்ன காரணம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.அதேநேரத்தில், அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கும் தகவல்கள்படி பார்த்தால், சேலம் தொகுதி யாருக்கு என்பதில், தே.மு.தி.க., - பா.ம.க., இடையே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை என, தெரியவந்துள்ளது. அதேபோல், திருப்பூர் யாருக்கு என்பதில், பா.ஜ., - கொ.ம.தே.க., இடையே முடிவு எட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

நாள் : 18-Mar-14, 6:02 pm

மேலே