¤இயற்கை¤ *மோதின மேகங்கள் அழுகிறது மலை அருவியாய்* *அடர்ந்த...
¤இயற்கை¤
*மோதின மேகங்கள்
அழுகிறது மலை
அருவியாய்*
*அடர்ந்த காடு
அமாவாசை இருள்
பயமின்றி மின்மினிகள்*
*இயந்திரம் உழுததை
வேடிக்கைப் பார்த்தன
உழவு மாடுகள்*
*உப்பு தண்ணீர்
இனித்ததோ குடித்ததும்
சிரித்தது உப்பளம்*
*பாலை வனத்தில்
நிழலுக்காக ஏங்கின
மரங்கள்*
(ஐவகை நிலங்கள்)
-வெற்றியன்பு
ஆயக்காரன்புலம்.4