எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் ............ மழை நின்ற பின் வெயிலும் வெயில்...

நான்

............


மழை நின்ற பின் வெயிலும்

வெயில் தாக்கம் போக்கும் மழையும் - நான்

தாமரை இலைக்கும் நீருக்கும்

இடையே உள்ள இடைவெளி இல்லா இடைவெளி நான்


உறவுக்கு பிரிவுக்கும் நடுவில் உள்ள

பிரபஞ்சம் கண்ட  மௌனம்  நான்.


நான் காணும் யாவும் நீ ஆதலால்

நீ யாகிய நீயும் நான்

எதில் எல்லாம் நான் என்னும் கர்வம் இல்லையோ அவை எல்லாம் நான்


பிறக்காத கனவும்,என்றும் இறக்காத

நினைவும் நான்


நான் என்றும் நான் அல்ல நீயாகிய நானே நான்.

பதிவு : santhosh bhavan
நாள் : 15-Mar-23, 9:29 pm

மேலே