அன்னபறவை என நினைக்கிறேன் உன் விழிகள் பார்வையால் பிரித்துவிட்டாய்...
அன்னபறவை என நினைக்கிறேன் உன் விழிகள்
பார்வையால் பிரித்துவிட்டாய் என் உயிரையும் உடலையும்;
வரி செலுத்தாமல் வியாபாரம் செய்கிறாய்
என்னுள் உந்தன் நினைவுகளை; கருணை கொண்டு நிறுத்திவிடு உன் விழிகளால் என்னை வதம் செய்வதை ;
காரணம் வேண்டுமா என்ன அழகை ரசிப்பதற்கு!
ஆனால் காரணம் வேண்டும் உன்னை நினைப்பதற்கு
அதிர்வுகள் கொள்கிறது எந்தன் கண்கள்
உந்தன் நீல நிற குறியீடுகளை நோக்கி; சமூக ஊடகத்தில் நான்;
உணர்வுகளை வெளிப்படுத்துகிறாய் சில ஸ்டிக்கர்களை அனுப்பி ,அர்த்தம் புரியாமல் உந்தன் இசைமொழியை நோக்கி என் மனம் ;
ஒப்புக்கொள்கிறேன் நீயும் பெண்தான் என்று,பெண்களை போலவே பேசுகிறாய்
ஸ்டிக்கர் தேடுகிறேன் எந்தன் காதலை வெளிப்படுத்த ஆனால் கிடைக்கவில்லை ஏனெனில் அதற்கு அளவே இல்லை;
ஏன் அன்பை அளவெடுக்க அந்த தொலைப்பேசிக்கும் அனுமதி தரப்படவில்லையோ!
மரணம்
நீ இல்லாத எந்தன் நினைவுகள் செல்லும் அவ்விடம் நோக்கி
திருடிய உயிரை கொடுத்துவிடு அப்பொழுதுதானே சாக முடியும்