மும்பை :பா.ஜ. ,வெற்றி பெறும் பட்சத்தில் பொது மக்களுக்கு...
மும்பை :பா.ஜ. ,வெற்றி பெறும் பட்சத்தில் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்காக 2 ஆயிரம் கிலோ லட்டு தயார் நிலையில் உள்ளது.
இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் அதுல் ஷா கூறியதாவது: தேர்தல் முடிவு இன்னும் முறையாக அறிவிக்கப்பட வில்லை. இருப்பினும் கருத்து கணி்பபுகளின் அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறுவது உறுதியாகி விட்டது. பிரதமர் வேட்பாளர் மோடியும் நாட்டின் 15-வது பிரதமராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இதனை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2 ஆயிரம் கிலோ லட்டுகள் தயார் செய்யும் பணி துவங்கி நடைபெற்று கொண்டு இருக்கிறது. இவை மட்டுமல்லாது மோடியின் வெற்றியை கொண்டாடுவதை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் பெரிய எல்,சி.டி திரை மூலம் காண்பிக்கப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.