எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடவுள் துகளும் திருமந்திரமும் அணு குறித்து அறிவியல் ஆர்வம்...

கடவுள் துகளும் திருமந்திரமும்

அணு குறித்து அறிவியல் ஆர்வம் காட்டியது சில நூறு வருடங்களாகத்தான் என்றாலும் நம் முன்னோர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அணுவைப் பற்றி அறிந்திருந்தனர்.
ஜீவனின் வடிவத்தைச் சொல்ல வந்த திருமூலர் ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். ஒரு மட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாகச் கொல்கிறார். பின்னர் அதிலிருந்த்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாகச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இது தான் ஜீவனின் வடிவம் என்கிறார்.
(எ.கா :- 100 * 1000 * 1,00,000 = 10,00,00,00,000)

ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றி திருமூலர்
-
"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் பயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாகுமே"

திருமூலர் இன்னொரு பாடலில் அணுவில் இறைவனும், இறைவனில் அணுவும் இறண்டறக் கலந்து இருப்பதை காணலாம் . இணையில்லாத ஈசன் அப்படி பிரபஞ்சம் முழுவதும் எங்கும் நிறைந்திக்கிறான்-என்று சொல்கிறார்.

"அணுவும் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலந்து உணரார்
இணையிலி ஈசன் அவனெங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே"

விளக்கம் :அணுவுக்கும் அணுவின்அடிப்படைத் துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒரு துண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணுவை நெருங்க கூடியவர்களுக்கு; பரம்பொருளை அடைதலும் கைகூடும்.

உலகம் எனும் இந்த பூமி, சூரியன், ஆகாய வெளி, அதில் தெரியும் நட்சத்திரங்கள், நட்சத்திரங்களுக்கும் அப்பால் கோடி கோடி மர்மங்களை உள்ளடக்கி இயங்கும் அண்ட சராசரங்களை எல்லாம் உருவாக்கியது யார்? எப்போது? எப்படி?
இன்று நேற்றல்ல… பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் விடைதேடிக் கொண்டிருக்கும் கேள்வி இது. ஆணித்தரமான பதில் கிடைக்காத நேரத்தில், நம்மை மீறிய சக்தி… என்ற பொதுவான சமாதானத்துடன் மனிதன் வாழ்க்கையைக் கடந்து போனான்.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அணுவை ரூதர் போர்டு பிளந்து பார்த்த போது உள்ளே எலக்ட்ரான், நியூற்றான், புரோட்டான் துகள்களும் பிரம்மண்டமான வெட்ட வெளியும் இருப்பதக் கண்டார். அணுவின் உள்ளே துகள்கள் சில சமயங்களில் துகள்களாகவும், சில சமயங்களில் அலைகளாகவும் பெரிய அளவில் சக்தி வெளிப்பாடுகள் இருப்பதை கண்டார். அதன் பின் அணு ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் உலக நாடுகளில் நடைபெறத் தொடங்கின

பிரபஞ்சப் பெரு வெடிப்பு நிகழ்ந்து ஒரு சில விநாடிகளில் தோன்றிய கனநிறைத் துகள்களில் “ஹிக்ஸ் போஸான்” என்பது ஒன்று என்னும் அழுத்தமான யூகம் விஞ்ஞானிகளிடையே நிலவி யுள்ளது. அதனால் அது “கடவுள் துகள்” என்றும் பலரால் மதிக்கப் படுகிறது.
ஹிக்ஸ் போஸான் ஓர் அடிப்படைத் துகள் ! மிகக் கனமானது ! சீக்கிரம் உடைந்து சிறு துகளாவது ! காலக்ஸிகள், சூரியன்கள், அண்டக்கோள்கள், கருந்துளை, கரும்பிண்டம், உயிரினங்கள், போன்ற பிரபஞ்சப் படைப்புகள் அனைத்துக்கும் “மூலச் செங்கல்” என்று கருதப்படுவது. அதன் இருப்பு அனுமானமும், கண்டுபிடிப்பு உறுதிப்பாடும், பிரபஞ்சத் தோற்றப் பெருவெடிப்பு நியதியைப் பூர்த்தி செய்து வலுப்படுத்துகிறது.
இந்தத் துகள் இருப்பதாக முதலில் சொன்னவர் பீட்டர் ஹிக்ஸ். அந்தப் பெயரில் பாதியை ஹிக்ஸ் என்றும், இந்தத் துகள்களில் இரண்டு வகை இருக்கிறது என பல ஆண்டுகளுக்கு முன்பேஇந்திய நாட்டின் இயற்பியல் அறிஞர் சத்யேந்திர நாத் போஸும், விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் தெரிவித்திருந்தனர். அதனால் அவர்கள் பெயரை இணைத்து ஹிக்ஸ் போஸான் என இந்தக் ‘கடவுளுக்கு’ நாமகரணம் சூட்டிவிட்டனர்!

பிரபஞ்சம் எங்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (Cosmic Dance)
நடராஜரின் பிரபஞ்ச நடனமும், அணுக்களின் நடனமும் ஒன்றே" என்று கூறும் அளவுக்கு, விஞ்ஞானமும் ஆன்மீகமும் நெருங்கி விட்டிருக்கிறது!

பதிவு : சிவநாதன்
நாள் : 28-Jun-14, 6:35 pm

மேலே