எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கச்சத்தீவு இராமநாதபுரத்தைத்தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட சேதுபதி மன்னனுக்குச் சொந்தமான...

கச்சத்தீவு

இராமநாதபுரத்தைத்தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட சேதுபதி மன்னனுக்குச் சொந்தமான எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று. ஆமைகள் அதிகமுள்ள இடமாதலால் இது கச்சத்தீவு எனப்பட்டது (கச்சம் - ஆமை). இந்திய நாட்டின் தமிழகத்திலுள்ள இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமான கச்சத்தீவைத் திடீரென இலங்கை அரசு உரிமை கொண்டாடியபோது, அப்போதைய இந்தியப் பிரதமரான நேரு கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவருக்குப் பின்னால் பிரதமர் பதவிக்கு வந்த இந்திராகாந்தி சில, பல அரசியல் காரணங்களுக்காக 1974இல் இலங்கை அரசுக்குத் தாரை வார்த்தார்.

ஆனாலும் தமிழக மீனவர்களிடம் மிகுந்த அக்கறை கொண்டிருந்த மத்திய அரசு அவர்களின் நலனுக்காகச் சிலவற்றை ஒப்பந்தத்தில் சேர்த்தது.

அவை,

1. இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் இளைப்பாறலாம்.
2. வலைகளைக் காய வைக்கலாம்.
3. அந்தோணியார் கோயில் விழாவுக்கு ஆண்டுதோறும் வரலாம்.

பதிவு : சிவநாதன்
நாள் : 10-Jul-14, 6:34 am

மேலே