தலைமுறையை நாம வழி நடத்தும் பக்குவம் நமக்கு இருக்கா?

நமக்கு அடுத்த தலைமுறையை நாம் வழி நடத்தும் பக்குவம் நமக்கு இருக்கா? இல்லையா?
வழிகாட்டுதல்னா அது நல்ல வழியா, வழிகாட்டினா தான் வழிகாட்டல்னு எடுத்துக்க முடியும். அடுத்த சமூகம் நல்லா இருக்கணும் ஒற்றுமையா இருக்கணும் இதே போல நினைச்சு வழிகாட்டினா அது சரி. ஆனா, நாம சின்ன வயசிலேயே பொய் சொல்ல கத்துக்கொடுக்கிறோம். தப்பு பண்ண கத்துக்கொடுக்கிறோம் இதெல்லாம் இல்லேனா இந்த காலத்தில வாழமுடியாதுனு சொல்லிக்கொடுத்தே தப்பு பண்ண வைக்கிறோம், அப்போ 'சமூகம் மாறாது நாம அதற்கேற்ப மாறணும்னு' மாறவைக்கிறோம். சமூகம் நல்லபடியா மாறவைக்கிறமாதிரி வழிகாட்டினா தான் அது வழிகாட்டல்.
சொல்லுங்கள் நண்பர்களே! நாம் தகுதியான அடுத்த தலைமுறை சமுதாயத்தை வழி நடத்துகிறோமா என்று சந்தேகம் வருகிறது?