கனவிற்கு பதில் அல்லது விளக்கம்
எனது தோழிக்கு திருமணம் முடிந்து விட்டது. ஆனால் கடந்த வாரம் ஒருநாள் அதிகாலை 4.00 அளவில் தோழிக்கு ஒரு கனவு வந்துள்ளது. அதில் அவர் வேறு ஒரு நபருடன் திருமணம் நடக்குமாறும் மற்றும் அதன்பின் அந்த நபர் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு மலைப்பகுதிக்கு சுற்றுலா செல்லுமாறும் அப்பொழுது எனது தோழி மலை பள்ளத்தின் அருகில் மயக்கம் போட்டு விழுந்து அவரை அந்த நபர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அங்கே அந்த நபர் தோழியை நன்றாக பார்த்து கொண்டதாகவும் கூறினார். ஆனால் அந்த நபரின் முகம் தெளிவாக தெரியவில்லை என கூறினார். இந்த கனவிற்கு என்ன விளக்கம் என தெரிந்தால் கூறவும்...