முன்பொருமுறை நான் வேலைப்பார்த்த நிறுவனத்தின் சார்பில் அமெரிக்க செல்ல நேர்ந்தது, அலுவலக செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் உள்ளிட்ட துறைகளில் எங்களை ஒத்த நிறுவனங்களுக்கு சென்று, அறிந்து அதை இங்கு செயல்படுத்துவதே அதன் நோக்கம். செலவு நிறுவனத்தை சார்ந்தது என்பதால், திரும்பி வந்தவுடன் இங்குள்ள உயரதிகாரிகள் உட்பட பல்வேறு ஊழியர்களுடன் எனது அனுபவங்களை பரிமாறி, என்னை அனுப்பியது சரிதான், அதனால் நிறுவனத்திற்கு பயன் ஏற்பட்டது என்ற சான்றிதழும் வழங்கப்பட்டது. அதன் பின் தான் நிறுவனம் எனக்கு செலவுக்கு அளித்த கடன் அட்டையின் (Credit Card) தொகைகைகான காசோலையை வழங்கியது.
என் கேள்வி, நமது அரசியல்வாதிகள் (பிரதமர் உட்பட) நம் செலவில் பல வெளிநாடுகளுக்கு சென்று பன்னாட்டு தலைவர்களுடன் கைகுழுக்கி வருகிறார்களே? உண்மையில் இதனால் என்ன பயன் நேர்ந்தது நமக்கு, ஏன் அதற்கான சீரான அறிக்கையை மக்களிடம் சமர்பிக்கக் கூடாது? பொது ஊழியர் (பல கோடி முதலாளிகள்) என்று மார்தட்டிக்கொள்கிறார்கள், ஆனால் தனியார் ஊழியர்களிடம் (ஒரு முதலாளி) இருக்கும் கட்டுப்பாடு கூட இவர்களுக்கு ஏன் இல்லை? உண்மையில் மக்களை (இவர்களின் முதலாளிகளை) ஏமாற்றுவது இவ்வளவு சுலபமா?
இப்படித்தான் இருக்க வேண்டுமா இன்றைய அரசியல்?