காதலுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கருத்துள்ள கவிதைகளுக்கு கிடைப்பதில்லை ஏன்??
காதல் கவிதைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது ஏன் ..??
10 கவிதைகளில் 8 கவிதைகள் காதல் சார்ந்ததாகவே இருப்பதை என்னவென்று சொல்ல..??
ஒவ்வொருவரும் காதலை ஒவ்வொரு விதமாக சொல்லலாம்,
பிறரை கவர்ந்து இழுக்க மட்டுமே காதல் கவிதை இங்கேயும் உலா வருகிறது..!!
அளவுக்கு மீறிய காதல் கவிதைகளில் அத்தனை வேறு கவிதைகளும் நசுங்கி விடுகிறது,
கேட்பாரின்றி கிடக்கும் நல்ல கவிதைகளுக்கு கொஞ்சம் வழிவிடுங்கள்..
காதல் என்ற கவிதைகளை வைத்துகொண்டு நிறைய காமப் பூச்சாண்டிகள் இங்கே உலவுகிறார்கள்...!!
வார்த்தையில் வக்கிரமம் உள்ளவர்களின் கவிதைகளை தான் நான் சொல்கிறேன்..!!!