வணக்கம்,
உங்களிடம் இரண்டு கேள்விகளை முன்வைக்கிறேன்.
1.எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் இருந்து, நான் 10 ம் வகுப்பு முடிக்கும்வரை மண்ணெண்ணெய் விளக்கொளியில்தான் படித்தேன். அந்த தருணங்கள் இன்னும் மறந்து போய்விடமுடியாத நினைவுகளாக என்னுள் வளம் வந்துகொண்டுதான் இருக்கிறது.
இன்றும்கூட எனது கிராமத்தில் மண்ணெண்ணையை நம்பி காலம் கழிப்பவர்கள் ஒருபாடு உண்டு. இன்னும் மின்சாரம் இல்லாமல் மண்ணெண்ணையை நம்பி வாழும் பல்லாயிரம் கிராமங்கள் உண்டு, அங்கே விளக்கொளியில் படிக்கும் தாமஸ் எடிசன்களும் உண்டு. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்ற போதிலும், அந்த இலவச மின்சாரத்தைகூட பெற முடியாத ஏழை விவசாயிகள், இன்னும் மண்ணெண்ணெய் என்ஜினை நம்பியே தனது வாழ்க்கையை வறுமைக்கிடையில் நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் மின்சார தட்டுப்பாடு நாட்டில் மேலோங்கி நிற்கிறது, பலமணி நேர மின்வெட்டுகளாலும், மழைகால மின் கோளாறுகளாலும் அடிக்கடி இருட்டில் சிக்கொள்ளும் மக்களுக்கு ஒரே ஒரு வடிகாலாக மண்ணெண்னைதான் இருக்கிறது. ஒருவகையில் எரி பொருள்களிலேயே மிக அத்தியவாசியமான இடத்தை மண்ணெண்ணெய் பிடித்து இருக்கிறது என்றே தாராளமாக கூறலாம்.
இப்படி இருக்கும் பட்சத்தில் மண்ணெண்ணெய் மானியத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் போக்கு சரியா? தவறா? - அதற்கான விளக்கங்கோடு பதில் வேண்டுகிறேன்.
2. இரண்டாவது கேள்வி:- பலமொழிகள் பேசப்படுகிற நமது நாட்டில், சமஸ்கிருதம் என்ற ஒரு மொழியை மட்டும் அரசு கட்டாயமாக மக்களிடம் திணிப்பது நியாயமா? - அவரவர்களுக்கும் ஒரு தாய்மொழி இருந்த போதிலும் இந்திதான் இந்தியாவின் தாய்மொழி என்றாகள், சரி என்று விட்டுவிட்டோம், இந்தியும் ஆங்கிலமும் கற்றுகொள்வதால் பலன் இருக்கிறது, சமஸ்கிருதம் கற்றுகொள்வதால் என்ன பலன் இருக்கிறது? சமஸ்கிருதம் படிப்பதால் வேலைவாய்ப்புகள் கிடைக்குமா அல்லது பசிக்கிற வயிறுக்கு கால் வயிறு கஞ்சியாவது கிடைக்குமா? விரும்புகிறவர்கள் படித்துக்கொள்ளட்டும், ஆனால் பல்மொழி பேசுகிற மக்கள் வாழும் நாட்டில் ஒருமொழியை கட்டாயமாக மக்களிடம் திணிப்பதில் என்ன நியாயம்தான் இருக்க முடியும் என்று கூறுங்களேன்.
நன்றிகளுடன்
நிலாசூரியன்.