வணக்கம்,
வணக்கம்,
எழுத்துத் தளத்திடம் ஒரு கேள்வி.
1. தளத்தில் ஏதாவது சமூகக்கட்டுரைகளை பதிவிட்டுவிட்டு, அதற்கான ஆதாரத்திர்காகவும், அத்தாட்சிக்காகவும் வேறு ஒரு இணையத்தில் இடமொபெற்று இருக்கும் ஆதாரப்பூர்வமான கருத்தினை காண்பதற்கு அந்த சொடுக்குப்பாதை இணைப்பினை கட்டுரையில் பதிவிட இயலவில்லை, அதாவது ஒரு வெப்சைட்டின் லிங்க்கை பதிவிட இயலவில்லை. ஒரு போட்டியோ, அல்லது ஒருவிவாதாமோ நடக்குமேயானால் ஆதார இணையங்களை எம்மால் இணைக்க இயலவில்லை. ஏன் ஆதார இணையங்களின் முகவரியினை இணைக்க இயலவில்லை?. ஆதார இணைய முகவரியின் இணைப்புவசதியை கொடுத்தால் என்ன கெடுதல்? தளத்திற்கு அதனால் ஏதேனும் பின்னடைவு வந்துவிடுமா? நிறையத் தளங்களில் அப்படிப்பட்ட வசதி இருக்கையில், எழுத்தில் மட்டும் ஏன் அந்த வசதி மறுக்கப்படுகின்றது?
நன்றிகளுடன்
நிலாசூரியன்.