நண்பர்களுக்கு வணக்கங்கள்,
சமீபத்தில் நான் எழுத்தில் இணைந்திருக்கிறேன். சில கவிதைகளை இங்கு பதிவிட்டிருக்கிறேன். எனினும் இன்றுதான் விதிமுறைகள் பக்கத்தை படித்தேன். இதில் கீழ்க்கண்ட வரிசை எண்களில் நான் கோரும் வார்த்தைகளுக்கு சற்று விளக்கம் தேவை.
6. தனி நபர் ஒருவரை/குழுவைப் பற்றி இழிவான/தவறுதலான/அந்தரங்க கவிதைகளை எழுதுதல் கூடாது.
7. கவிதையின் உட்பொருள் / உள்ளடக்கம் நயமற்றதாகவோ அல்லது ஆபாசம் நிறைந்ததாகவோ இருக்கக் கூடாது. அவ்வாறான கவிதைகள் சமர்பிக்கப்படின், எழுத்து இணையத்தளத்தில் தங்களுடைய கணக்கு (account) முடக்கி விடப்படும்.
மேலும் முதல் பதிவிலிருந்தே பதிவேற்றும் முன் கீழ்க்கண்ட குறிப்புக்கு ஒப்புதல் அளித்தே பதிவும் செய்கிறேன்.
[குறிப்பு:உங்களின் படைப்பு அல்லது கருத்துக்கள் ஒருவரை தாக்கிப்பேசுவதாகவோ, கொச்சைப்படுத்துவதாகவோ, காயப்படுத்துவதாகவோ, அபாயகரமானதாகவோ, பயமுறுத்துவதாகவோ, சட்டத்திற்கு புறம்பானதாகவோ, தரம்குறைவானதாகவோ மற்றும் பெருமை குலைப்பதாகவோ இருந்தால் அது சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .]
சரி, என் சந்தேகம் இதுதான். பொதுவாக நாம்(ன்) அன்றாட வாழ்வில் நிகழும் விசயங்களை, மனிதர்களையொட்டித்தான் நாம்(ன்) நம்(என்) உணர்வுகளை ஏதோ ஒரு பரிமாணத்தில் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறோம்(றேன்). அப்படியிருக்க, அவற்றின் தரம் ஆராய்வதோ, யாரையாவது காயப்படுத்துமென்றோ (சம்பந்தபட்டவர்களை பெயர் கொண்டே, என்னை அடையாளமிட்டோ - குறிப்பிடாதபோதும்) அல்லது அதன் பாதிப்பு எவ்வகையிலிருக்குமென்றே அனுமானிக்க முடியாத என்னால் மேற்கொண்டு என்ன செய்வது?