என் கேல்விகள்-02

1). மகன் தன் தாய்தந்தைக்கு ஆற்றும் இறுதி கடமை மூட நம்பிக்கையா?

2). சமூக அக்கறையாளனின் கோவம் தீ பிடிக்கும் முன்னே அணைவது ஏன்?.

3). செய்யும் பாவங்களையெல்லாம் செய்துவிட்டு என்னை மன்னித்டுவிடு இறைவா என்று கோவில் உண்டியலில் பணம் கொட்டுகின்றனர், இதில் பாவக்கணக்கின் பயன்தான் என்ன?.

4). இல்லாதவனை ஏளனமாகவும் இருப்பவனிடம் சால்ரா அடிப்பவர்களின் கொள்கைதான் என்ன?.

5). மனிதாபிமானமற்ற சொற்களோ அல்லது கேள்விகளோ எழுப்பப்படும்போது மற்றவர்களின் உள்ளுணர்வு கொல்லப்படுவதை ஏன் அறிவதில்லை.அறியாமையினால் எழுப்பப்படுகிறதா? இல்லை அடுத்தவர் மீது தன் ஆதிக்கத்தை செலுத்துவதற்குத்தானா?.

6). ஒரு மனிதனுக்கு இரு முகங்கள் இருப்பது உண்மையா? இருந்தால் அது நன்மையா அல்லது தீமையா?.



கேட்டவர் : அ பெரியண்ணன்
நாள் : 17-Aug-16, 6:38 am
0


மேலே