*பரபரப்பான உள்ளாட்சி தேர்தல்*
*******************************.
உள்ளாட்சி தேர்தல் ஒரே வார்டில் ஒரே கட்சியில் இருந்து இரண்டு பேர்.
ஒரே சமுதாயத்தில் இருந்து ஐந்து பேர்.
ஒரு வார்டில் 500 ஓட்டிற்கு எட்டு அல்லது பத்து பேர்.
வசதி உள்ளவன் பணத்தை தண்ணியாக விரைத்து செலவு செய்து வாக்கு கேட்கிறான்.
இல்லாதவன் கடன் வாங்கி நகையை அடகுவைத்து செலவு செய்து வாக்கு கேட்கிறான்.
சிலர் சிலரை தோற்கடிக்க வேண்டும் என்பதர்க்காக போட்டியிடுகின்றனர்.
இதந்த தேர்தலால் சில குடும்பத்திற்க்குள் பகை.
உறவுக்குள் பகை.
ஜமாத்தில் பகை. நட்பு வட்டாரத்தில் பகை. சமூகங்களுக்கு மத்தியில் பகை.
ஏன்? எதற்கு?
மக்களுக்கு சேவைசெய்யவா?
ஆம் எனில்,
• இன்றைக்கு தேர்தலுக்காக வேட்ப்பாளர்களையும்,
வாக்கு கேட்டு வருபவர்களையும்
இதற்கு முன் சமுதாய பிரச்சனை நடக்கும் இடங்களில் பார்த்ததுண்டா?
• ஏதாவது பொது பிரச்சனைக்காக போராட்டங்களில் ஈடுபட்டதுண்டா?
• பாதிக்கபடும் மக்களுக்காக காவல் நிலையங்கள் மருத்துவ மனைகள் வழக்காடு மன்றங்களில் காவல் நின்றது உண்டா?
• சமூக சேவை துப்புறவு பணி இரத்ததானம் சாலைசீரமைப்பு என்று களப்பணி ஆற்றியது உண்டா?
இன்னும் கேள்விகளை அடுக்கி கேட்கலாம்.
சரி மக்கள் நனுக்காக தெரு தெருவாக வீடுவீடாக இன்று ஏறி இறங்கும் இவர்கள் இதற்கு முன் கழிந்த 5 ஆண்டுகளாக ஏதாவது விசயத்தில் உங்களுக்காக உங்கள் வீட்டிற்கு வந்ததுண்டா?
இப்படி இரவு பகலாக இன்று உங்களை தேடிவரும் இவர்கள் இதற்குமுன் இப்படி சமுதாயத்திற்க்காக சமூக பிரச்சனைக்காக ஓடி வந்ததுண்டா?
இவ்வளவு செலவு செய்து இவ்வளவு கஷ்டபடுவது வார்டு மக்களுக்காக சேவை செய்யவா?
தன் சொந்த பணம் ஐந்தாயிரம் அல்லது ஐம்பதனாயிரம் செலவு செய்து மக்கள் பணிசெய்ய இவர்களுக்கு எவ்வளவு ஆர்வம்?
உதவி என்று நீங்கள் யாராவது ஒரு அவசரத்திர்க்கு கேட்டு இவர்கள் கொடுத்ததுண்டா?
என்றால் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்.
இப்படி ஓடி ஒடி செலவுசெய்து ஏன் இவர்கள் மக்கள் நலபணி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.
வாக்காளர்களே.! சிந்திப்பீர்.!
நல்ல சமுதாய சமூக பணியாளர்களை தேர்ந்தெடுப்பது உங்கள் பொறுப்பு.