பார்வையிழந்தோர் எண்ணிக்கை 2050-ல் மும்மடங்காகும் ஆய்வில் தகவல்

பார்வையிழந்தவர்களின் தற்போதைய எண்ணிக்கையான 3.6 கோடியில் இருந்து, 2050ஆம் ஆண்டுவாக்கில் 11.5 கோடியாக அதிகரித்துவிடும் என்று லான்செட் க்ளோபல் ஹெல்த் (Lancet Global Health) என்னும் மருத்துவ சஞ்சிகை கணிப்பு வெளியிட்டுள்ளது.

188 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில், 20 கோடிக்கும் அதிகமான மக்கள், மிதமானது முதல் கடுமையானது வரையிலான கண் பார்வைக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டில் 55 கோடியாக உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"சிறிய அளவிலான பார்வைக் கோளாறுகூட ஒருவரின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது" என்கிறார் ஆங்கிலா ருஸ்கின் பல்கலைக்கழக பேராசிரியர் ருபெர்ட் போர்னே.

தற்போது உள்ள காற்று மாசுபடுதல், வாகனங்களில் பயணம் செய்யும்போது ஏற்படும் புகை, தூசி ஆகியவை சிறுவயதிலையே கண் கோளாறுகள் ஆரம்பமாகிறது...

இதை தடுக்க தகுந்த நடவடிக்கை அரசு எடுக்குமா?
அல்லது மக்கள் விழிப்புணர்வு வேண்டுமா?
வருமுன் காப்போம்...கேட்டவர் : மனிதன்
நாள் : 10-Nov-17, 2:05 pm
0


மேலே