பிள்ளையின் ஏக்கம்
நான் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, குடிக்கார ஒருவன், தன் மகனோடு(வயது 12) உணவு அருந்த வந்தான். அவன் தனக்கு 3 பரோடாவும், தனக்கும் தன் மகனுக்கும் ஒரு ஹல்ப் பாயில் ஆர்டர் செய்தார்கள். அந்த பிள்ளை தனக்கும் பரோடா வேண்டும் என்றான், அதற்கு அவன் ஹல்ப் பாயில் மட்டும் சாப்பிடு என்று கூறிவிட்டான். சிறிது நேரம் கழித்து கடைக்காரனிடம், மொத்தம் எவ்வளவு என்று கேட்டான், 50 ஆகிறது என்றான். அவன் தன்னிடம் இருந்த பணத்தை கணக்கிடான், 60 ருபாய் இருந்தது. மீண்டும் அவன் தனக்கு ஒரு ஒம்ப்ளேட் ஆர்டர் செய்து சாப்பிட்டான், அப்பிள்ளை ஏமாற்றுடன் தன் தந்தை பார்த்து கொண்டு இருந்தான்.
அந்த சூழ்நிலையில் என்னால் என்ன செய்வது என்று தெரியவில்லை...
நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?