செல்ல இளங்கோ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செல்ல இளங்கோ
இடம்:  திருச்செங்கோடு
பிறந்த தேதி :  02-Jun-1966
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-May-2017
பார்த்தவர்கள்:  101
புள்ளி:  10

என் படைப்புகள்
செல்ல இளங்கோ செய்திகள்
செல்ல இளங்கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2017 6:51 pm

நித்தம் புலம்பி
நிலை கெட்டு
சாகும்
நிலையில்லா
வாழ்வில்
நிதர்சனம்
எதுவுமில்லை
நிமிசங்களை
நீ மதி
நீள் உலகை
நீ மதி
தாய் தந்தையை
நீ மதி
தானே வரும்
நிம்மதி ...!


கவிஞர் செல்ல இளங்கோ

மேலும்

அருமை நட்பே... 17-Jun-2017 4:49 pm
செல்ல இளங்கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2017 7:22 pm

சரிந்த
சாம்ராஜ்யங்கள்

சந்தி சிரிக்கும் - கள்ள
சம்சார பந்தம்

நேற்று வந்த
பாகுபலி

நெடுஞ்சாலை
பனை மரத்தடியில்

சறுக்கி விடும்
அரசியல் சதுரங்கம்

எங்கும்
மோகமாய்
தாகமாய்
தவிப்பாய்
முந்தானை
சறுக்கல்கள்...

ஆண்மை தவறின்
வாழ்க்கை
வழுக்கி விடும்
வழக்கில் விடும்

மேலும்

செல்ல இளங்கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2017 8:23 pm

காக்கி ட்ரௌசர்
கழடாம இருக்க பின்னூக்கி
கை கிழிஞ்ச
கசங்கின சட்டை
காலுக்கு செருப்பில்ல
கஞ்சி கூடை கையிலில்ல
மேலுக்கு போட்ட துணி
முச்சூடும் வெள்ளையில்ல
மஞ்ச புஸ்தக பை எடுத்துகிட்டு
மத்தியான சோத்துக்கு.....


கவிஞர் செல்ல இளங்கோ

மேலும்

செல்ல இளங்கோ - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2017 7:29 pm

கடலின் கரம்
நதி
நதியின் துணை
நாணல்
நாணலின் நரம்பென
வேர்கள்
வேரின்றி விளையாது
பூமி
பூமிக்கு சூரியன் தான்
சாமி
சாமிக்கு தூதுவன் தான்
மனிதன்
நீ மனிதன்

மேலும்

செல்ல இளங்கோ - செல்ல இளங்கோ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2017 1:35 pm

மகாபாரதம் கண்ட
பாரதத்தில்
ராமன் போல்
அண்ணன் இல்லை..
பரதன் போல்
தம்பி இல்லை...


பனை மரத்தின் கீழ்
பால் விற்பது
யார் குற்றம்

பாதையில்
வழுக்கி விழுந்தால்
நண்பரே ; மனைவி மக்களே
பார்த்து
பல்லிழுக்கும் நேசம்
பகல் வேசம்
போடும்

இன்றெல்லாம்
உண்மையில்
நட்பு உண்டு
நட்பினில் உண்மை
இல்லை

துரியோதனன் மனைவி
இடைபற்றிய கர்ணன்
சிதறிய முத்துச்சரம்
முத்துக்களை
எடுக்கவா கோர்க்கவா
கேட்கும் நட்பின்
தூய்மையான
துரியோதனன்கள்
இல்லை

காலம் மாறிப் போச்சு
களவு காதல் ஆச்சு
யாரோ ஒருவரின்
தோல் அரிப்பு செய்யும்
தவறால்
சகலரும் சகி அல்ல
இது
சகிக்கல்ல...!
நெசம்..

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே