துரியோதனன்கள் இல்லை
மகாபாரதம் கண்ட
பாரதத்தில்
ராமன் போல்
அண்ணன் இல்லை..
பரதன் போல்
தம்பி இல்லை...
பனை மரத்தின் கீழ்
பால் விற்பது
யார் குற்றம்
பாதையில்
வழுக்கி விழுந்தால்
நண்பரே ; மனைவி மக்களே
பார்த்து
பல்லிழுக்கும் நேசம்
பகல் வேசம்
போடும்
இன்றெல்லாம்
உண்மையில்
நட்பு உண்டு
நட்பினில் உண்மை
இல்லை
துரியோதனன் மனைவி
இடைபற்றிய கர்ணன்
சிதறிய முத்துச்சரம்
முத்துக்களை
எடுக்கவா கோர்க்கவா
கேட்கும் நட்பின்
தூய்மையான
துரியோதனன்கள்
இல்லை
காலம் மாறிப் போச்சு
களவு காதல் ஆச்சு
யாரோ ஒருவரின்
தோல் அரிப்பு செய்யும்
தவறால்
சகலரும் சகி அல்ல
இது
சகிக்கல்ல...!
நெசம்... இங்கே..!
நேசம் எங்கே.....!??
கவிஞர் செல்ல இளங்கோ