சுந்தரேசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுந்தரேசன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  14-Nov-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Feb-2017
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  1

என்னைப் பற்றி...

தாழிடாமல் தமிழை ஏற்கும் தமிழன்

என் படைப்புகள்
சுந்தரேசன் செய்திகள்
சுந்தரேசன் - எண்ணம் (public)
10-Mar-2017 7:16 am

பெண்ணியம்...!!!!

கூட்டு பறவைக்கும் கூண்டு பறவைக்கும் ஒரே சிறகுகள் தான் உண்டு...ஆனால் பறக்கமுடிவது என்னவோ கூட்டுப்பறவையால் தானே..!!
பெண்களின் கதையோ...
கூண்டிலொரு கூடுகட்டி பறக்கமுயலும் பறவை போலே...!!
பெண்ணியத்தின் குரல் விம்மி விம்மி ஒலித்தாலும்....வீரியத்தோடு ஒலித்தாலும்...கேட்பதற்குதான் யாருமற்ற நிலை...!!
மனதில் உதிக்கும் உணர்ச்சிகளை...
தன்னை மண்ணோடு புதைக்கும்வரை..
தன்னோடு புதைத்து வாழும் பெண்ணுக்கு முகத்தில் மட்டும் ஆனந்தத்தின் ரேகை...!!!
மகளாக இருக்கும் போது பெற்றவரின் அரவணைப்பு.... பின் மனைவியான பின்னே கணவனின் அரவணைப்பு... அதுவும் நிச்சயம் கிடைக்குமென எதிர்பார்க்கமுடியாது...!!
அள்ளித்தரப் பாசமிருந்தும்...அதை ஏற்க...தான் பெற்ற பிள்ளைகள் விரும்பாததைக் கண்டு உணர்கிறாள்.... காலம் மாறும்போது மனிதமனமும் மாறுகிறதென்று...!!
பெண்மையங்கே பயனற்றுப் போகிறது... பெண்மையங்கே மயானத்தில் வீழ்கிறது...!!
சிறுமியாய் என்றும் இருந்திருக்கலாமென்று அவள் மனதில் தோன்றும் நொடி அது...!!!


~சுந்தர்

மேலும்

சுந்தரேசன் - எண்ணம் (public)
27-Feb-2017 9:52 am

சொல்லாமல் போன காதல்...

உரைக்கப்பட்ட காதல்கள் உறவாடிச் செல்ல,
சொல்ல மறந்த காதல் என்னோடு உறங்குதே...!!
கண்ணாடி பிம்பங்கள் உன் முகம் காட்ட....கடிகார நகர்வுகள் நினைவுகளை கூட்ட...மெலிதாய் எழும் சலனங்கள் மனதினை வாட்டுதே...!!
உன் விழி கண்டு பேசத் தயங்கிய என் விழிகள் ஈரத்தில் மிதக்குதே...!! 
வலியோடு வாழ்க்கை நீயின்றி நகர, இது பிரிவில்லை மனம் நோக...என்று தேற்றுகின்றேன் தினம் சாக...!!!
சூடாமல் போன பூக்களுக்கு கூந்தல் மீதென்ன உரிமை?? 
தேடாமல் போன பொருளாய் தொலைந்த காதல் தொல்லை தருதே!! 
தூக்கமில்லா இரவுகளில்.... துக்கமும் ஏக்கமும் தூக்கு கயிராய் தோன்றுதே...!!
எத்தனை தருணங்கள்...எத்தனை விருப்பங்கள்.....மௌனத்தில் புதைந்ததே...!!
ஒரு நொடி உன்னிடம் காதலை, இரு இதயம் இணைக்கும்படி நெஞ்சுடைத்து பகிராமல் போன பாவியாய் ஆனேனே....!!!
மலர நினைத்த காதலை மொட்டாக மூடிக்கொண்டேன்...தேன் அளிக்க வழியுமின்றி மண்ணோடு உதிர்ந்துவிட்டேன்.....!!
உன் முகச்சுவட்டை தேடித் தேடிக் களைத்துவிட்டேன்....ஒரு முறை என் முன் தோன்றிவிடு...ஓராயிரம் முறை காதலைக் கூறுகிறேன்.... என்னை ஏற்பதும் நான் தோற்பதும் என்னை இனியும் பெரிதாய் பாதிக்கப் போவதில்லை...!! 

~சுந்தர்

மேலும்

சுந்தரேசன் - எண்ணம் (public)
22-Feb-2017 4:30 pm

விரிசல்...!!


இணைக்க முடியா விரிசல்கள் உலவும் உலகிது....!!
பிணைத்தபின் பாசம் குறைந்து பிரியும்
காலமிது....!!
உடலும் குருதியும் தந்த தாய் தந்தையினின்று விலகுவதில் தொடங்குகிறது விரிசல் விழும் படலம்..!
தனித்து வாழவும் தன்னலம் பேணவும் பழகிக் கொள்கிறது மனிதகுணம்...!
உறவுகளைத் தொலைத்து விட்டு நொடிக்கொரு முகமூடி அணிகிறது மாந்தர்மனம்..!!
காதலிலும் திருமணத்திலும்...தானே தோற்றுவித்த விரிசல்களும்...தானாய் விரிசல்களும் தான் எத்தனை..!!
விரிசல் விரிவடையும் விபரீதம் புரியாமல் பாதாளம் நோக்கி விரையும் வேளையில் விழிப்பு வருகிறது...!!
உண்மையான உறவுகளற்ற நேரத்தில்...நாடக நடிகனாய் நடித்து...விழி(திரை) மூடும்போது தொலைந்து போகிறோம்...!!
   
~சுந்தர்

மேலும்

சுந்தரேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 7:11 pm

பயமாய் தான் இருந்தது.... எங்கே தொலைந்துபோய் விடுவேனோ என்று...!!
அன்று வண்டி இழுத்தேன்....ஏர் பூட்டி உழுதேன்...ஆனால் ராசாவாக வாழ்ந்தேன்..!!
இன்று என் வேலையை மாற்றீடு செய்ய ஏருந்தும் இதர வாகனங்களும் இருக்கின்றன...என்னைத்தான் அனைவரும் மறந்துவிட்டனர்...!!
வருடம் ஒருமுறை நடந்த சல்லிக்கட்டில் தலைகாட்டி ஒருநாள் ராசாவாய் இருந்துவந்தேன்...!!
அதையும் பறிக்க ஒரு கும்பல் நாடுகடந்து வந்தது...நான் துயரடைவதாய் அவர்களுக்கு நான் சொல்லவில்லையே!!!
துடிக்கத் துடிக்க என் உறவுகளை மாடுவதைகூடங்களில் கொலை செய்த போது இவர்கள் எங்கே..??
என் நிலை எண்ணி கலங்கிய வேளையில் இத்தனை நாளாய் நான் யாரென்று அறியாத இளைஞர்கள் என

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே