எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்ணியம்...!!!!

கூட்டு பறவைக்கும் கூண்டு பறவைக்கும் ஒரே சிறகுகள் தான் உண்டு...ஆனால் பறக்கமுடிவது என்னவோ கூட்டுப்பறவையால் தானே..!!
பெண்களின் கதையோ...
கூண்டிலொரு கூடுகட்டி பறக்கமுயலும் பறவை போலே...!!
பெண்ணியத்தின் குரல் விம்மி விம்மி ஒலித்தாலும்....வீரியத்தோடு ஒலித்தாலும்...கேட்பதற்குதான் யாருமற்ற நிலை...!!
மனதில் உதிக்கும் உணர்ச்சிகளை...
தன்னை மண்ணோடு புதைக்கும்வரை..
தன்னோடு புதைத்து வாழும் பெண்ணுக்கு முகத்தில் மட்டும் ஆனந்தத்தின் ரேகை...!!!
மகளாக இருக்கும் போது பெற்றவரின் அரவணைப்பு.... பின் மனைவியான பின்னே கணவனின் அரவணைப்பு... அதுவும் நிச்சயம் கிடைக்குமென எதிர்பார்க்கமுடியாது...!!
அள்ளித்தரப் பாசமிருந்தும்...அதை ஏற்க...தான் பெற்ற பிள்ளைகள் விரும்பாததைக் கண்டு உணர்கிறாள்.... காலம் மாறும்போது மனிதமனமும் மாறுகிறதென்று...!!
பெண்மையங்கே பயனற்றுப் போகிறது... பெண்மையங்கே மயானத்தில் வீழ்கிறது...!!
சிறுமியாய் என்றும் இருந்திருக்கலாமென்று அவள் மனதில் தோன்றும் நொடி அது...!!!


~சுந்தர்

மேலும்

சொல்லாமல் போன காதல்...

உரைக்கப்பட்ட காதல்கள் உறவாடிச் செல்ல,
சொல்ல மறந்த காதல் என்னோடு உறங்குதே...!!
கண்ணாடி பிம்பங்கள் உன் முகம் காட்ட....கடிகார நகர்வுகள் நினைவுகளை கூட்ட...மெலிதாய் எழும் சலனங்கள் மனதினை வாட்டுதே...!!
உன் விழி கண்டு பேசத் தயங்கிய என் விழிகள் ஈரத்தில் மிதக்குதே...!! 
வலியோடு வாழ்க்கை நீயின்றி நகர, இது பிரிவில்லை மனம் நோக...என்று தேற்றுகின்றேன் தினம் சாக...!!!
சூடாமல் போன பூக்களுக்கு கூந்தல் மீதென்ன உரிமை?? 
தேடாமல் போன பொருளாய் தொலைந்த காதல் தொல்லை தருதே!! 
தூக்கமில்லா இரவுகளில்.... துக்கமும் ஏக்கமும் தூக்கு கயிராய் தோன்றுதே...!!
எத்தனை தருணங்கள்...எத்தனை விருப்பங்கள்.....மௌனத்தில் புதைந்ததே...!!
ஒரு நொடி உன்னிடம் காதலை, இரு இதயம் இணைக்கும்படி நெஞ்சுடைத்து பகிராமல் போன பாவியாய் ஆனேனே....!!!
மலர நினைத்த காதலை மொட்டாக மூடிக்கொண்டேன்...தேன் அளிக்க வழியுமின்றி மண்ணோடு உதிர்ந்துவிட்டேன்.....!!
உன் முகச்சுவட்டை தேடித் தேடிக் களைத்துவிட்டேன்....ஒரு முறை என் முன் தோன்றிவிடு...ஓராயிரம் முறை காதலைக் கூறுகிறேன்.... என்னை ஏற்பதும் நான் தோற்பதும் என்னை இனியும் பெரிதாய் பாதிக்கப் போவதில்லை...!! 

~சுந்தர்

மேலும்

விரிசல்...!!


இணைக்க முடியா விரிசல்கள் உலவும் உலகிது....!!
பிணைத்தபின் பாசம் குறைந்து பிரியும்
காலமிது....!!
உடலும் குருதியும் தந்த தாய் தந்தையினின்று விலகுவதில் தொடங்குகிறது விரிசல் விழும் படலம்..!
தனித்து வாழவும் தன்னலம் பேணவும் பழகிக் கொள்கிறது மனிதகுணம்...!
உறவுகளைத் தொலைத்து விட்டு நொடிக்கொரு முகமூடி அணிகிறது மாந்தர்மனம்..!!
காதலிலும் திருமணத்திலும்...தானே தோற்றுவித்த விரிசல்களும்...தானாய் விரிசல்களும் தான் எத்தனை..!!
விரிசல் விரிவடையும் விபரீதம் புரியாமல் பாதாளம் நோக்கி விரையும் வேளையில் விழிப்பு வருகிறது...!!
உண்மையான உறவுகளற்ற நேரத்தில்...நாடக நடிகனாய் நடித்து...விழி(திரை) மூடும்போது தொலைந்து போகிறோம்...!!
   
~சுந்தர்

மேலும்


மேலே