குற்றியலிகரம்

(Kuttriyalikaram)

குற்றியலிகரம்

குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்

ஒரு தமிழ்ச் சொல்லில் நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து 'யகரமாகவும்' இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அத்தகைய இகரம் குற்றியலிகரம் (குறுகிய ஓசையுடைய இகரம்) ஆகும்.

உதாரணம்

நாடு + யாது = நாடியாது
கொக்கு + யாது = கொக்கியாது

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்

கேள் + மியா = கேண்மியா
கண்டேன் + யான் = கண்டேனியான்மேலே