வல்லினம்

(Vallinam)

வல்லினம்

வல்லினம் = வல் + இனம்

மெய்யெழுத்துக்களின் மூன்று வகுப்புக்களுள் முதலில் வருவது வல்லினம் ஆகும்.

வன்மையாக ஒலிக்கும் எழுத்துக்களை வல்லெழுத்துக்கள் அல்லது வல்லினம் என்றழைப்பர்.

க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு மெய் எழுத்துக்களும் வலிய ஓசை உடையவையாதலால் இவை வல்லின எழுத்துக்கள் ஆகும்.

வல்லினத்திற்கு வேறு பெயர்களும் உண்டு. அவை வலி, வன்மை, வன்கணம்.

வல்லென்று இசைப்பதாலும் "வல்" என்ற தலைவளியால் பிறப்பதாலும் வல்லெழுத்து எனப் பெயர் பெற்றது.

உதாரணம்

க் - தங்கக் குடிசை
ச் - வேர்ச் சொல்
த் - தங்கத் தட்டு
ப் - ஊக்கப் பரிசு



மேலே