மெய்யெழுத்துக்கள்

(Mei Eluthukkal)

மெய்யெழுத்துக்கள்

உயிர் எழுத்துகளைப் போலவே மொழிக்கு அடிப்படையாக உள்ள மற்றொரு வகை எழுத்துக்கள் மெய்யெழுத்துகள் ஆகும்

தமிழில் க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் ஆகும்.

மெய் எழுத்துகளை ஒற்று எழுத்துகள் என்றும், புள்ளியுடன் இருப்பதால் புள்ளி எழுத்து என்றும் கூறுவர்.

அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்

மேற்காணும் பதினெட்டு எழுத்துக்களும் இயல்பாக ஒலிக்கக் கூடியன அல்ல. இவற்றை ஒலிப்பது சற்றுக் கடினம்.

மெய் எழுத்து தனித்து இயங்காதவை ஆகும்.

உயிர் இல்லாமல் உடல் இயங்காது. அதுபோல இந்த 18 எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களுடன் சேர்ந்தே இயங்கும்.

உதாரணம்

க் - அக்கா
ங் - உள்ளங்கை
ச் - பச்சை
ஞ் - பஞ்சு
ட் - பட்டு
ண் - எண்
த் - பத்து
ந் - பந்து
ப் - உப்பு
ம் - அம்பு
ய் - மெய்
ர் - பார்
ல் - கல்வி
வ் - கவ்வு
ழ் - தாழ்வு
ள் - பள்ளம்
ற் - வெற்றி
ன் - அன்பு


மெய் எழுத்து வகைகள்
(Mei Eluthu Vagaigal)


மேலே