மெல்லினம்
(Mellinam)
மெல்லினம்
மெல்லினம் = மெல் + இனம்
மெய்யெழுத்துக்களின் மூன்று வகுப்புக்களுள் இரண்டாவதாக வருவது மெல்லினம் ஆகும்.
மென்மையாக ஒலிக்கும் எழுத்துகளை மெல்லினம் அல்லது மெல்லின எழுத்துக்கள் அல்லது மெல்லெழுத்துக்கள் என்றும் கூறுவர்.
ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறு மெய் எழுத்துகளும் மெலிய ஓசை உடையவையாதலால் மெல்லின எழுத்துகள் ஆகும்.
மெல்லினத்திற்கு வேறு பெயர்களும் உண்டு. அவை மெலி, மென்மை, மென்கணம்.
மெல்லென்று இசைப்பதாலும் "மெல்" என்ற மூக்கின் வளியால் பிறப்பதாலும் மெல்லெழுத்து எனப் பெயர் பெற்றது.
உதாரணம்
ங் - சங்கு
ஞ் - பஞ்சு
ண் - பண்டம்
ந் - பந்து
ம் - பாம்பு
ன் - இன்று