தமிழ் கவிஞர்கள்
>>
வாணிதாசன்
>>
அலை ஓசை!!
அலை ஓசை!!
கைகளில் ஒட்டியிருந்த
மணல் துகள்களைத் தட்டியபடி
"நேரமாச்சு, போகலாம் " என்றெழுந்தாய்!
பலத்த சத்தத்தோடு வந்த
அலைக் காற்று ஒன்று - உன்
காதோரக் கூந்தலை கலைத்துச் சென்றது !
"இன்று அலையின் ஓசை
அதிகமாய் உள்ளதே " என்றாய் !
'அது வேறொன்றுமில்லை
நீ. உன் கை மணலை தட்டியதை
பார்த்துவிட்ட அலை ஒன்று
தன்னை ரசித்து கை தட்டியதாக
எண்ணிக்கொண்ட சந்தோசக் கூக்குரல்தான் அது என்றேன்!!
"ஆரம்பிச்சுட்டீங்களா ..."என்றபடி
நீ ஆரம்பித்தாய்
உன்கவிதையை ,
அது அப்படி அல்ல ...
" கடலின் மேற்பரப்பில்
காற்று எழுதி அனுப்பும்
கவிதை வரிகளுக்கான
கை தட்டல் தான்
இந்தஅலை ஓசை! " - என்றாய் !!
உடனே ஒரு
செல்ல அலை வந்து
உன் பாத விரல்களை
முத்தமிட்டுச் சென்றது
என் சார்பாக...!!
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)