மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

யானை படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா - அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா - அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு - அத்தை
மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் - பொருள் தந்து மணம் பேசுவார் - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார் - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக - மாமன்
தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா?
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா?
பிரித்த கதை சொல்லவா?
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா

ம்ம்... அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ

கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 2:13 pm)
பார்வை : 182

பிரபல கவிஞர்கள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே