தாஜ்மஹால் தேவை இல்லை
தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவு இதுவோ
(தாஜ்மஹால்..)
பூலோகம் என்பது பொடியாகி போகலாம்
பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
கண்ணீரிலே ஈரமாகி கரை ஆச்சி காதலே
கரை மாற்றி நாமும் வெல்ல கரை ஏற வேண்டுமே
நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே
(தாஜ்மஹால்..)
சில் வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில் வண்டுகள் காதல் பண்ணால் செடி என்ன கேள்வி கேட்குமா
வண்டு ஆடும் காதலை கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்ப பாவம் என்பதா
வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
வாழாத பேருக்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
வாணும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே
(தாஜ்மஹால்..)