வைரமுத்து குறிப்பு

(Vairamuthu)

 ()
பெயர் : வைரமுத்து
ஆங்கிலம் : Vairamuthu
பாலினம் : ஆண்
பிறப்பு : 1953-07-13
இடம் : வடுகபட்டி, தேனி மாவட்டம் ,தமிழ்நாடு, �

வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.முன்பு இளையராஜவுடனும் , பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் காலத்தால் அழியாப் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுக பட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1984ல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலை பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு இரு மகன்கள்,பெயர்கள் மதன் கார்க்கி, கபிலன
வைரமுத்து கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

பிரபல கவிஞர்கள்

மேலே