உடைகிறேன் வாயை மூடிப் பேசவும்

உடைகிறேன் உடைகிறேன்
இதயத்தின் விரிசலில்!
கிழிகிறேன் கிழிகிறேன்
மௌனத்தின் இரைச்சலில்!

பாதை இல்லாமலே...
அலைகிறேன் அலைகிறேன்
உருவம் இல்லாமலே....
கலைகிறேன் கலைகிறேன்

யாரும் இல்லாத ஊரில்
நானும் இல்லாமலே தொலைகிறேன்!

புதைகிறேன் புதைகிறேன்
மனமெனும் சகதியில்!

காற்றில் ஈரம் இங்கில்லையே
காதல் வாசம் இங்கில்லையே
நான் யாரென்று என்னை
மனம் கேட்கும் போது

நான் என்ன சொல்வேனோ?
என் மௌனம் ஆவேனோ?

நொறுங்கினேன் நொறுங்கினேன்
உலகமே பிழையென!

பேசா சொற்கள் எல்லாமே
நெஞ்சில் முட்கள் என்றே... கிழிகிறேன்!


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 3:10 pm)
பார்வை : 0


மேலே