தமிழ் கவிஞர்கள்
>>
மதன் கார்க்கி வைரமுத்து
>>
மாற்றப் பறவை வாயை மூடிப் பேசவும்
மாற்றப் பறவை வாயை மூடிப் பேசவும்
றெக்கை கொண்ட மாற்றமோ
வான் விட்டு மண்ணில் வந்ததே!
சுவாசக் குழல் சேர்த்திட
பூக்களை ஏந்தி வந்ததே!
குமிழ் குமிழ் என குழப்பங்களை
அலகினைக் கொண்டு உடைக்கிறதே!
நெஞ்சில் பூட்டி வைத்த வார்த்தைகளைக்
கொத்தி வெளியிலே எடுக்குதே!
மாற்றப் பறவையோ
தோளில் அமர்ந்ததே
காதில் இரகசியம்...
ஒன்று சொல்லி விட்டுப் பறந்ததே!
முடிவுகள் தேடி
முட்டிக்கொள்ள வேண்டாம்
முயல்வது ஒன்றே
என்றும் இன்பம் என்றே...
றெக்கை கொண்ட மாற்றம் என்
காதினில் சொல்லிச் சென்றதே!
பயம் விட்டு என்னை வாழச் சொன்னதே
மனம் விட்டு என்னைப் பேசச் சொன்னதே
மொழி உதவிட மறுக்கையிலே
செய்கையால் சொல் என்றதே!
மாற்றப் பறவையோ
காற்றில் மிதக்குதே!
எந்தன் மனதையும்...
இன்று கவ்விக் கொண்டு பறக்குதே!