மாஞ்சா மான் கராத்தே

மாஞ்சா போட்டுதான்
நெஞ்சாங் கூட்டுல
பட்டம் விட்டுப் போனா!

மாங்கா மண்டையில்
பூங்கா செஞ்சுதான்
காதல் நட்டுப் போனா!

ஹே குச்சி ஐஸுல
எச்சி வெச்சவ
பிச்சி என்ன தின்னா!

ஹோ கோலி கண்ணுல
பீலிங் காட்டிதான்
காலி காலி பண்ணா

ஹே பிக்காலியா
ரோட்டு மேல பாட வுட்டு
தக்காளியா
என்ன உருட்டிவுட்டா

நாஷ்டா துன்னுட்டு
நீட்டா தூங்குவேன்
நான் ஙொய்யால இப்ப
காதல் வந்து ஆடுறேன்!

தாம் தரீக தகிட தாம்....


ஒன் பிச் கேட்சுல காதல் பிட்ச்சுல
காஜி ஆடி நின்னேன்
லாபால் ஒண்ணுல மிட்டில் ஸ்டம்புல
ஏன் டி போல்டன் பண்ண?

யாக்கர் ஏத்துனேன் யாத்தே செக்சியா
சிக்ஸர் தூக்கி உட்ட!
லோட்டாங்கையில நெஞ்ச கெலிச்சுதான்
காமெடி ஆக்கிப்புட்ட!

டும்மாங்கோலீயா
நான் இங்க நின்னேன்!
கொந்தீட்டு போனா
நான் என்ன பண்ணேன்?

ஒரு கைத நான் தான் பீட்டரு
நீ மைதா கோந்து போஸ்டரு
அவ்ளோதான் நம்ம மேட்டரு

நான் ஙொய்யால இப்ப
காதல் வந்து ஆடுறேன்!

தாம் தரீக தகிட தாம்....


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 3:13 pm)
பார்வை : 0


மேலே