அனாமிகா அனாமிகா மௌனகுரு

அனாமிகா ஹே அனாமிகா
அடிமனவெளிகளில் அனாமிகா
அனாமிகா ஹே அனாமிகா
அலையென அலைந்திடும் அனாமிகா

அனாமிகா ஹே அனாமிகா
அடைமழைக்குடை என அனாமிகா
அனாமிகா ஹே அனாமிகா
அறையினில் பிறையென அனாமிகா

என் இதயத் திசைமானி
காட்டுகின்ற திசையில் நீ
என்னவென்று அவதானி
காதல்தானா?

உன் விழியில் வாழ்வேனா
உன் நிழலில் வீழ்வேனா
கேள்விகேட்கும் நெஞ்சோடு
காதல்தானா?

ஹே ஹே உன் அருகிலே
நொடிகளின் இடைவெளி பெருகிடக் கண்டேன்
ஹே ஹே உன் அருகிலே
புதுஒரு உறவினை அரும்பிடக் கண்டேன்
ஹே ஹே என் அருகிலே
உனைஉனை நீயே விரும்பிடக் கண்டேன்
ஓ ஹோ என் கனவிலே
ஓர் இருதயப்பெயர்ச்சியைக் கண்டேனே!

யாரோடும் காணா ஒன்றை
ஏனுன்னில் நானும் கண்டேன்?

ஹே உன் உடல்மொழி
காதல் மொழியுதே!

ஊரோடு ஏனோ இன்று
வண்ணங்கள் கூடக் கண்டேன்

ஹே உன் எதிரொளி
நெஞ்சில் பதியுதே!

தினசரி கனவதன் உணவென
உனைதரும் நினைவுகள் தேக்குகிறேன்! - உன்
அரைகுறை உரைகளை கரையுமுன்
உறைசிறை அறைகளில் பூட்டுகிறேன்!

ஹே ஹே உன் அருகிலே
நொடிகளின் இடைவெளி பெறுகிடக் கண்டேன்
ஓ ஹோ என் கனவிலே
ஓர் இருதயப்பெயர்ச்சியைக் கண்டேனே!


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 1:01 pm)
பார்வை : 0


மேலே