மெசியாவின் காயங்கள் - இலையுதிற் காலம்


ஜெ. பிரான்சிஸ் கிருபா
சிதைந்த உடலுமாய்
நிழலில் அமர்ந்து
யாசிக்கும் கிழவனை
பணயம் வைத்து
கைச் சிட்டுகளாய்
பழுத்த இலைகளை இறக்கி
பகலைச் சூதாடிக் கழிக்கின்றன
பூவரச மரங்கள்.


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 9:17 am)
பார்வை : 51


மேலே